சென்னை:இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அமைச்சர் ரகுபதி நீதி நிர்வாகம் தொடர்பாகவும், சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நீதி நிர்வாகம்
- காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கிவரும் மாவட்ட நீதிமன்றம் எண் II ஐ முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.
- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தற்போது இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தற்போது இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் மாற்றியமைக்கப்படும்.
- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- தென்காசி மாவட்டம் தென்காசியில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 4.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.