தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினி கட்சியில் தலைவர்களே இல்லை! - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

சென்னை: எம்ஜிஆர் போன்ற தலைவர்களை இரவல் வாங்குவது, ரஜினி கட்சியில் வேறு தலைவர்களே இல்லை என்பதை காட்டுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

By

Published : Dec 9, 2020, 4:33 PM IST

Updated : Dec 9, 2020, 6:00 PM IST

jayakumar
jayakumar

தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், சிறப்புப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சேர்க்கை ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர். அவரை வேறு எந்தக் கட்சியும் சொந்தம் கொள்ள முடியாது. தலைவர்களை இரவல் வாங்குவது, ரஜினி கட்சியில் எந்தத் தலைவர்களும் இல்லை என்பதை காட்டுகிறது.

2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருப்பதால், ஆ.ராசா விரைவில் சிறை செல்ல நேரிடும். ஜெயலலிதா குறித்து தேவையில்லாமல் ராசா பேசி வருகிறார். வழக்கு குறித்து வழக்கறிஞர் ஜோதியுடன் ஆ.ராசா விவாதிக்க தயாரா? ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது திமுக ஆட்சி. ஊழலின் ஒட்டு மொத்த உருவம் திமுக. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை நிலையைக் கண்டறிவது தான் அரசின் எண்ணம். அதனால்தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. மிக விரைவில் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.

எம்ஜிஆர் வெளிநாட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன்னிடம் ஆட்சியை கொடுங்கள், எம்ஜிஆர் வந்தவுடன் அவரிடம் தந்து விடுவேன் என்றவர் கருணாநிதி. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர்கள் பதவி வெறி பிடித்தவர்கள் என்பதை. எனவே இனிமேலாவது அநாகரிகமாக பேசுவதை விட்டு, நாகரிக அரசியலில் திமுக ஈடுபட வேண்டும்.

ரஜினி கட்சியில் தலைவர்களே இல்லை! - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

இதையும் படிங்க: 2ஜி குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன் முதலமைச்சருக்கு ஆ.ராசா மீண்டும் சவால்

Last Updated : Dec 9, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details