தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் எஸ்.பி பாலியல் புகார் வழக்கு: ஆண் எஸ்.பி.,யின் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

பெண் எஸ்.பி.,யை கொடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SP Sexual Harassment Case
SP Sexual Harassment Case

By

Published : Apr 20, 2022, 10:24 AM IST

சென்னை: கடந்தாண்டு முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய பெண் ஐபிஎஸ் அலுவலரிடம், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ஆக இருந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் மற்றும் பெண் எஸ்.பியை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இரு மனுக்கள்: இந்த புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆண் எஸ்.பி வழக்கு தொடர்ந்தார்.

காவல் துறை தரப்பு: அதேசமயம், உட்புகார் விசாரணை குழு, விதிப்படி அமைக்கவில்லை என்பதால் அதை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நேற்று (ஏப். 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்கும் குழு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு டிஜிபி வழக்கு தள்ளிவைப்பு: இதை பதிவு செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறக் கோரி எஸ்.பி அளித்த மனுவை, சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். குழு அமைத்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் - இபிஎஸின் நிலைபாடு என்ன? - புகழேந்தி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details