தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கதிர் ஆனந்த் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை: 4 வாரங்களுக்கு நிறுத்தி நீதிமன்றம் உத்தரவு

கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை நடவடிக்கை: நிறுத்திவைத்த நீதிமன்றம்!
கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை நடவடிக்கை: நிறுத்திவைத்த நீதிமன்றம்!

By

Published : Apr 21, 2022, 11:58 AM IST

சென்னை:கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வேலூர் தொகுதி் திமுக வேட்பாளரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதில், தாமோதரன் - விமலா தம்பதியர் வீட்டில் நடத்திய சோதனையில் 11 கோடியே 48 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த தொகையை கதிர் ஆனந்த் வருமானமாகக் கணக்கிட்ட வருமான வரித் துறையினரிடம், அத்தொகைக்கு வரி செலுத்தக் கூறி நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த தொகை கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கதிர் ஆனந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில், வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தனக்கு சொந்தமானதல்ல எனவும், அதனால் அந்த தொகைக்கு வரி செலுத்தும்படி தனக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென வருமான வரித்துறை தரப்பு கோரிக்கை வைத்தது.

கதிர் ஆனந்த் தரப்பில் வரி செலுத்துவதற்கு தனி நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால் வழக்கை இம்மாத இறுதியில் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் அல்லது தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கதிர் ஆனந்திடமிருந்து வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்திவைத்த நீதிபதிகள், விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:Income Tax Raid: திரவிய தொழிற்சாலையில் அதிரடி சோதனை

ABOUT THE AUTHOR

...view details