தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க   உத்தரவு

நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் வீட்டுமனைப் பிரிவு அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

By

Published : May 7, 2022, 9:40 PM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் எழிச்சூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, இரண்டு குட்டைகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை நத்தம் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் வீட்டுமனைப் பிரிவை அமைக்க சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜூப்ளி பிளாட்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் நகரமைப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுப்பணித்துறை மற்றும் கீழ் பாலாறு பாசனப் படுகை ஆகியவற்றின் கட்டுப்பட்டில் இருந்த இந்த விவசாய நிலத்தை வீட்டுமனைப்பிரிவுகளாக மாற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை.

எனவே வீட்டுமனைப்பிரிவு அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதேபோல மனைகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சேகர் சுயம்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (மே 7) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details