தமிழ்நாடு

tamil nadu

கரோனா தொற்று ஏற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதி!

By

Published : Jul 9, 2020, 3:35 PM IST

சென்னை: கரோனா தொற்று ஏற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 26 பேருக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதி
கரோனா தொற்று ஏற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதி

சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மனநல காப்பக மருத்துவமனையில் 26 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் மொத்தம் 100 பேர் இருந்துள்ளனர். மீதமுள்ள 74 பேருக்கும் கரோனா தொற்று மாதிரிகள் எடுத்துப் பரிசோதித்ததில் அவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

மனநல பாதிப்பு உள்ளவர்களைப் பிற கரோனா தொற்று நோயாளிகளுடன் சேர்ந்து சிகிச்சை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், கரோனா தொற்று ஏற்பட்ட 26 பேரை, சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கீழ்பாக்கத்தில் ஏற்கெனவே மனநல சிகிச்சையில் உள்ள 700 பேருக்கு ஏதேனும் தொற்று தொடர்பான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில்; அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details