தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனநலம் பாதித்து திரிவோரை காப்பகத்தில் சேர்க்க உத்தரவு!

சென்னை: மாநிலம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு, பொது இடங்களில் சுற்றித் திரிவோரைக் கண்டறிந்து, அரசு காப்பகங்களில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Aug 3, 2020, 7:34 PM IST

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருவதாகவும், அதில் பலருக்குக் கரோனா தொற்று உள்ளதாகவும், ஆனால் அவர்களுக்குப் போதிய உணவும் தங்குமிடமும் இல்லை என்பதால்; அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், செய்தித்தாள்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பழனி மலையைச் சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிவதாகத் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவேண்டும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து, அந்தப் பகுதிகளில் உள்ள மனநலம் பாதித்தவர்களைக் கண்டறிந்து, அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை வருகிற 18ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காவல்துறையிடம் சிக்கிய நள்ளிரவு கொள்ளையர்!

ABOUT THE AUTHOR

...view details