சென்னை: ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இணையும் விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினால் ஊழலை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். அதனை அரசியல் பழிவாங்குதல் என்று தெரிவிக்கக்கூடாது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனம், இந்தியாவிற்கு தகவல்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளது. அதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. வேளாண் சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்க்கட்சி என்கின்றனர். ஆனால் தற்போது விவாசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமரா? - கே.எஸ். அழகிரி