தமிழ்நாடு

tamil nadu

சென்னையின் குடிநீருக்காக தமிழ்நாடு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்

By

Published : Jun 16, 2021, 4:04 PM IST

சென்னை: சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. பால் வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி வரவேற்றனர்.

Krishna Nidhi Water arrived in Tamil Nadu
Krishna Nidhi Water arrived in Tamil Nadu

சென்னை : தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டுக்கு 12டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும்.

அந்தவகையில் தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், இருமுறை கடிதம் எழுதிய நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 14ஆம் தேதி விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயிண்டில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது பால் வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

தமிழ்நாடு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ஆந்திராவில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை முழுமையாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை குடிநீர் ஏரிகளான சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகளில் 6.6 டிஎம்சி தண்ணீர் இருப்பும், இந்தப் பருவத்திற்கான 0.5 டிஎம்சி தண்ணீரும் கிடைப்பதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details