சென்னையில் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஏப். 7) நடைபெற்றது. இதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் யஷ் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் வெளியிட்டோம். எனது நண்பரும் நடிகருமான விஷால் வெளியிட்டார். முதல்பாகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் கடினமான உழைப்பாளிகள். மிகவும் பணிவானவர்கள். இந்த படம் டப்பிங் படம் என்றுசுலபமாக சொல்லி விடலாம். ஆனால், மற்ற மொழிகளுக்கு படத்தை டப்பிங் செய்யும் போது படத்தை மீண்டும் எடுத்ததுபோன்று இருக்கும்.
தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். நல்ல படம் பண்ண வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கம். எனக்கு தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியானால் அனைவருடைய பார்வையும் அந்த படத்தின் மீதே இருக்கும். இதே நிலைதான் கர்நாடகாவிலும் இருக்கிறது.
கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை:ஒருபடம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். இந்த படத்தில் சாதாரண மனிதர்கள் தங்களது வாழ்க்கையில்படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. கேஜிஎஃப் நடந்த கதை அல்ல, கற்பனை கதை. சட்ட விரோதமான சுரங்கங்கள் எல்லா இடங்களிலும் இருந்துள்ளது.