அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூன்று பேரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகாரளித்தார். இதனையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் விரைவில் நோட்டீஸ் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அதேசமயம், இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து 22 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, 114 எம்எல்ஏக்களுடன் சேர்த்தால், அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 121ஆக உயரும்.
ஆனாலும், அதிமுக எம்எல்ஏக்களான, ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இருப்பினும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்று எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். கருணாஸின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐந்து பேர் நீங்கலாக, அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116ஆக இருக்கும்.