சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், "தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் 100 விழுக்காடு தபால் வாக்கினை உறுதி செய்ய வேண்டும். தற்போது 4.5 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 100 விழுக்காடு தபால் வாக்குகளை உறுதி செய்ய ஜாக்டோ ஜியோ கோரிக்கை
சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு 100 விழுக்காடு தபால் வாக்கினை உறுதி செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தனர்.
இவர்களில் 60 விழுக்காடு பேருக்கு வாக்கு செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கடந்தத் தேர்தலிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதேபோன்று தபால் வாக்குகள் செலுத்துவதில் குளறுபடிகளை சந்தித்தனர். தற்போது அவ்வண்ணம் நிகழாமல் இருக்க வாக்கு எண்ணும் தேதிக்கு முன்னதாக சிறப்பு முகாம் அமைத்து தேர்தலில் பணிகளில் ஈடுபடுபவர்கள் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேலும் மற்றொரு கோரிக்கை மனுவில், "பூத் லெவல் அலுவலர் (BLO) பணி வழங்கும்போது அவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அந்தப் பணி வழங்கப்படுகிறது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் BLOக்களுக்கு பணி வழங்கி இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பணி ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.