தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிளாஸ்டிக் விற்பனையைத் தடுக்க திடீர் சோதனை நடத்த  அரசுக்கு உத்தரவு!

சென்னை: கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்களுக்கு வெளியே நெகிழிப் பைகளில் பொருள்கள் விற்பதைத் தடுக்க திடீர் சோதனைகளை நடத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ban
ban

By

Published : Feb 19, 2020, 1:47 PM IST

தமிழ்நாட்டில் நெகிழி பயன்படுத்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தடை விதிப்பதாக அரசு ஆணை வெளியிட்டது. இதற்காகp பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் நெகிழிப் பைகள் பயன்படுத்தக் கூடாது என சுற்றிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில்கள், தர்காக்கள், தேவாலாயங்கள் ஆகிய தலங்களுக்கு வெளியே பூஜைப் பொருள்கள், பூக்களை விற்பவர்கள் நெகிழிப் பைகளை பயன்படுத்துகிறார்கள். அதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், கடற்கரையில் நடத்தப்படும் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நெகிழி குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் எனக்கூறி வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பயங்கரவாதிகள் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details