தரமற்ற ’ரேபிட் டெஸ்ட்’ பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும், கருவிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.