திருப்பூர் மாவட்டம் ஷியாமளாபுரத்தில் 2017ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் காவல் துறை டிஎஸ்பி தாக்கியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 9 பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 9 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், டாஸ்மாக் கடை திறக்கும்போது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பை பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்றும், எனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கின் அடுத்தக்கட்ட காவல் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மங்கலம் காவல் துறை பதிலளிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளை கூலிகளாக மாற்றவே புதிய வேளாண் சட்டம்