தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TN WEATHER: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 4) இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN WEATHER
TN WEATHER

By

Published : Dec 4, 2021, 6:11 PM IST

Updated : Dec 4, 2021, 8:00 PM IST

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 4) இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய நிலவரம்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (டிசம்பர் 5) இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேலும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 6, 7 நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (டிசம்பர் 6) லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 8 நிலவரம்

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வலுவிழக்கும் புயல்

இன்று: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் இன்று புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் நாளை புயல் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs NZ: ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்; அசத்திய அஜாஸ் படேல்

Last Updated : Dec 4, 2021, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details