சென்னை:இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ”தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். இரண்டாம் தவணை வந்தும் தடுப்பூசி செலுத்தாத நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
அதேபோல் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு இன்றுமுதல் (ஜனவரி 3) தடுப்பூசி செலுத்தப்படுவதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்துதல், தொடர்புடைய நபர்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் படுக்கைகள் தயார்
சென்னை, அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1.15 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். தொற்று கண்டறியப்பட்டவர்கள் அவர்களுடன் இருந்த நபர்களைக் கட்டாயம் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். இந்திய மருத்துவ முறைகள், சித்த மருத்துவத் துறைகளில் பணியாற்ற விரும்புபவர்களையும் பணியில் ஈடுபடுத்தி, ஆரம்ப நிலை, லேசான அறிகுறியுடன் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கி, தேவையான படுக்கை வசதிகளை அமைக்க வேண்டும். தொற்று அதிகம் கண்டறிந்து வரப்படும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் அஜாக்கிரதையுடன் இல்லாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி