முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசுக்கு நளினி மனு அனுப்பினார். இதையடுத்து அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என நளினி உரிமையாக கேட்க முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.