தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2 கோடிக்கு மேல் உள்ள ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களுக்கு 15 நாள் அவகாசம் கட்டாயம் - உயர் நீதிமன்றம்

இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய ஒப்பந்தப்புள்ளியை அறிவிக்கும்போது, 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court order
high court order

By

Published : Jul 23, 2020, 12:20 PM IST

சென்னை:பழைய கட்டடங்களை இடிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ஜூன் 26ஆம் தேதி வெளியிட்டது. அதனை விண்ணப்பிக்க ஜூலை 7ஆம் தேதி மாலை 4மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20ஆவது பிரிவின்படி, ஒப்பந்தபுள்ளி சமர்பிப்பதற்கான இறுதி நாளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டுமென்ற விதிமுறைகளை பின்பற்றவில்லை என ஸ்ரீ லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளரான வி.முனிகிருஷ்ணன் என்பவர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையரை அணுகி, இறுதி தேதியை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா அச்சத்தால் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை!

பின்னர் வேண்டப்பட்டவருக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்படுவதற்காக தாமதமாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி, விதிகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யக்கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இ.சத்யராஜ் ஆஜராகி, ஒப்பந்தப்புள்ளி விதிகளை பின்பற்றாமல் ஒவ்வொரு முறையும் இதேபோலத்தான் அறிவிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். கரோனா கால கட்டுப்பாடுகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரலை ஒதுக்கி வருவதாகவும், இது எதிர்காலத்தில் தொடராத வகையில் நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் இ.பாலமுருகன் ஆஜராகி, மூன்று வெவ்வேறு பணிகளுக்காக மட்டுமே ஒப்பந்தபுள்ளி அறிவிக்கப்பட்டதாகவும், ஜூலை 7ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளியை விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், ஜூலை 9ஆம் தேதி அந்த பணிகள் மற்றொரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிந்து, அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

வனிதா விஜயகுமார் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா தேவி கைது

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அரசின் விளக்கத்தின்படி பணிகள் தொடங்கிவிட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, ஸ்ரீ லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்சன்ஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அதேசமயம் எதிர்வரும் காலங்களில் இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளியை அறிவிக்கும்போது, தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழ் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details