புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆளுநர், முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.