தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 51 ஆயிரத்து 364 மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

governor
governor

By

Published : Feb 5, 2020, 5:29 PM IST

Updated : Feb 5, 2020, 9:02 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முன்னாள் நீதிபதி விமலா “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். ஆசிரியர் பணியினை தேர்வு செய்துள்ள நீங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினால், அவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறையும் ” என்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 48 ஆயிரத்து 373 பி.எட் மாணவர்களுக்கும், 2,510 எம்.எட் மாணவர்களுக்கும், 45 எம்.ஃபில் பட்டதாரிகளுக்கும், 72 ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார். லிபியாவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 153 மாணவர்களும் நேரில் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆசிரியர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் வழங்கினார்

இந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி. அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொதுத் தேர்வு ரத்து - வரவேற்பு தெரிவித்த சூர்யா, தனுஷ்

Last Updated : Feb 5, 2020, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details