சென்னை: அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரவணன்(28). இவர் தனியார் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்து வரும் ஓப்ராய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சரவணன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லாவரம் அருகே அடையாளம் தெரியாத மூவர் சரவணனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
மேலும் சரவணனின் செல்போன், இருசக்கர வாகனம், அதிலிருந்த எட்டு பார்சல்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து சரவணன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த எட்டு பார்சல்களில் என்ன இருந்தன என சரவணனிடம் காவல் துறையினர் கேட்டனர்.
கொள்ளை நாடகம் அம்பலம்
அதற்கு சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் கேள்விக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தினறிய சரவணன் ஒரு கட்டத்தில் உண்மையை கூறினார்.
அந்த எட்டு பார்சல்களிலும் தங்க கட்டிகள் இருந்ததாக தெரிவித்தார். மேலும், துபாயிலிருந்து விமானத்தில் வந்த தங்க கட்டிகளை, எனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான் என்பவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது, எனது நண்பர்களை வரவழைத்து கொள்ளை சம்பபம் நடந்ததுபோல நாடகமாடி அந்த தங்க கட்டிகளை தாங்கள் திருட திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடன் பணிபுரியும் பிரபுராம் (37) விமான நிலைய சோதனை பிரிவில் பணிபுரியும் முகமது நஷீத் (25) ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி கொண்டே, வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தும் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவி வந்தது தெரியவந்தது.
தங்கம் கடத்தல்