தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏப்.15க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை-சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-23ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை ஏப்.15ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை மாநாகராட்சி
சென்னை மாநாகராட்சி

By

Published : Apr 12, 2022, 12:59 AM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை ஏப்.01 முதல் 15 தேதிக்குள் செலுத்தி சொத்துவரியில் 5% ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம் (Paytm), கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியற்றின் வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம் எனவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது தவிர்த்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. மாநகராட்சியைப் பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் தங்களின் 2022-23ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியினை செலுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட்

ABOUT THE AUTHOR

...view details