தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஆலந்தூரில் 1 கோடியே 37 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

சென்னை: தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 1 கோடியே 37 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தேர்தல் பறக்கும் படை

By

Published : Mar 29, 2019, 6:43 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாலசுப்ரமணியன் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது.இதனையடுத்து பணத்தினை பறிமுதல் செய்து அவர், தேர்தல் அலுவலர் பார்த்திபனிடம் ஒப்படைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details