தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2021, 8:11 PM IST

Updated : Jul 4, 2021, 9:59 PM IST

ETV Bharat / city

மீன்வரத்துக் குறைவால் வருத்தத்தில் மீனவர்கள்: டீசல் விலை குறித்து அரசிடம் கோரிக்கை!

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மீன் சந்தையில் மொத்த வியாபாரம் ஒரு இடத்திலும், சில்லறை வியாபாரம் வேறொரு இடத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து டீசல் விலையைக் குறைக்க தமிழ்நாடு அரசிடம் மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்வரத்து குறைவால் வருத்தத்தில் மீனவர்கள்
மீன்வரத்து குறைவால் வருத்தத்தில் மீனவர்கள்

சென்னை: காசிமேடு மீன் சந்தை நுழைவுப் பகுதியில், மீன்பிடித் துறைமுக காவலர்கள், தடுப்புகள் அமைத்து பாஸ் உள்ள வியாபாரிகளை மட்டும் சோதனைசெய்து அனுப்பினர். மேலும், மீன் சந்தையில் மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என இரண்டு இடத்திலும் மீன் விற்பனை செய்யப்பட்டது.

சமூக இடைவெளி

இதனால், மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் காவல் துறையினர் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை செய்து, எந்த இடத்திலும் கூட்டம் சேர விடாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

டீசல் விலை குறைக்க கோரிக்கை

'மீனவர்கள் அனைவரும் டீசலை நம்பியே தொழில் செய்துவருகிறோம். டீசல் விலையேற்றத்தால் காசிமேட்டில் உள்ள 1500 விசைப் படகுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் இன்னும் தொழிலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீன்வரத்துக் குறைவால் டீசல் விலையை குறைக்கக் கோரும் மீனவர்கள் தொடர்பான காணொலி

இந்த டீசல் விலை உயர்வு மீனவர்களின் வாழ்வாதரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. டீசல் விலை உயர்வைக் குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Last Updated : Jul 4, 2021, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details