தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வாகனங்களுக்கான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு'

சென்னை: வாகனத்திற்கான ஆண்டு வரி, காலாண்டு வரி செலுத்த ஜூன் 30ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

tax
tax

By

Published : May 15, 2020, 12:36 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனையடுத்து வாகனங்களின் உரிமையாளர்கள் வாகன வரிகளைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில்,

"பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்டம் 1974இன்படி செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான 2020 ஏப்ரல் 10, காலாண்டு வரி காலக்கெடுவான 2020 மே 15 வரியினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்துவகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றி செலுத்த ஜூன் 30ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தொடங்கியது சுங்கக் கட்டண வசூல்- சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details