தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

ETV BHARAT TOP 10 NEWS
ETV BHARAT TOP 10 NEWS

By

Published : Dec 6, 2020, 8:57 AM IST

தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி போராட்டம்: தேஜஸ்வி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 18 பேர் மீது காந்தி மைதான காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

16 நாள்களில் 13 மடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு நவம்பர் 19ஆம் தேதிமுதல் கடந்த 16 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையை 13 மடங்கு அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

குடும்பங்களின் செலவு மேலும் அதிகரிக்கும் - ஆர்பிஐ நடத்திய கணக்கெடுப்பில் வெளியான தகவல்

டெல்லி: குடும்பங்களின் செலவினங்கள் அடுத்த ஓராண்டிற்கு பிறகு மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பட்டியலின தொழிலாளர்களைக் கொடூரமாகத் தாக்கும் மேற்பார்வையாளர்கள்!

மத்தியப் பிரதேச மாநிலம் பெட்மா காவல் எல்லைப் பகுதியில் வேலைசெய்ய மறுத்த பட்டியலினத் தொழிலாளர்களை மேற்பார்வையாளர்கள் கொடூரமாகத் தாக்கும் காணொலி காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பயிற்சி முடிந்த 395 இளம் வீரர்களுக்கு ராணுவத்தில் பணி

ராணுவ கல்லூரியில் பயிற்சி முடிந்த 395 இளம் வீரர்களின் ராணுவ அணிவகுப்பு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

காரைக்காலில் இணையவழி புகார் பெட்டி அறிமுகம்

நாகப்பட்டினம்: காரைக்காலில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக ஆன்லைன் கம்ப்ளைன்ட் பாக்ஸ் என்ற இணையவழிப் புகார் பெட்டியினை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் அறிமுகப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் பட பாணியில் கைத்துப்பாக்கி, 30 சவரன் நகை கொள்ளை

வேலூர்: குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்கள், 30 சவரன் தங்க நகை, 3.5 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

'நாட்டாமை' பட கதாசிரியர் ஈரோடு சௌந்தர் காலமானார்

ஈரோடு: சிம்மராசி, முதல் சீதனம் திரைப்படங்களின் இயக்குநரும், சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களின் கதாசிரியருமான ஈரோடு செளந்தர் (63) உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார்.

ஐஎஸ்எல் : ஈஸ்ட் பெங்காலைப் பந்தாடியது நார்த் ஈஸ்ட்!

ஐஎஸ்எல் தொடரில் இன்று (டிச.05) நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி அசத்தியது.

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 23 பேர் மரணம், ஒருவர் உயிருடன் மீட்பு

சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் மூடப்பட்ட டயோஷிடோங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைட் கசிவினால், பணியில் ஈடுபட்டிருந்த 24 ஊழியர்களில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details