சென்னை:பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரது அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டில் எந்த மாநகராட்சியிலும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.