இதுகுறித்து சென்னையில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
‘நாட்டில் நிலவும் சமூக பொருளாதார பிரச்னைகள் தொடர்பாக அனைத்திந்திய முற்போக்கு பேரவை இயங்கிவருகிறது. இந்த அமைப்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
கருத்தரங்கம்
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பாக இந்திய அளவில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி, உருவாகிவரும் போக்குகள் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம் வரும் ஜனவரி மதம் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
மத்திய அரசு தவறான கொள்கைகளைக் கடைபிடித்து வருவதை எங்கள் அமைப்பு தொடர்ந்து கண்டித்துவருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடைமுறை படுத்தக்கூடாது என்று நாடுமுழுவதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். நாட்டின் ஒற்றுமையைக் காக்க மதசார்பின்மையை நிலைநிறுத்த இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பாக பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் அதிக அளவில் வேலையிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்கவுன்டர் தீர்வு இல்லை!
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க என்கவுன்டர் தீர்வு இல்லை. சட்டப்படி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைக் கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் வேறுபாடு குறித்த பாடங்களை கொண்டுவர வேண்டும்’ என கூறினார்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பேட்டி இதையும் படியுங்க:'கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது' - நடிகை கஸ்தூரி