தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்: முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

edappadi palanisamy

By

Published : Jun 11, 2019, 12:48 PM IST

Updated : Jun 11, 2019, 2:22 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குழந்தைப் பருவம் மனித வாழ்வின் பொற்காலம். பள்ளி சென்று கல்வி பயிலவும், ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய குழந்தைப் பருவத்தில், வேலைக்குச் செல்வதென்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கக்கூடியது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல்வி என்னும் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத்தில், வேலைப் பளுவினைச் சுமந்து நிற்கின்ற குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்ய செய்வதே தமிழ்நாடு அரசின் அடிப்படைக் குறிக்கோளாகும். இதற்காக வளமான மனித வளத்தினை உருவாக்கவும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் மத்திய உணவு உள்ளிட்டவற்றை தமிழக அரசு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்து, அதனை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நாம் அனைவரும் குழந்தைகளின் உரிமைகளை மதித்திடுவோம். குழந்தைகளை, வேலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதியேற்று தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jun 11, 2019, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details