தமிழ்நாட்டில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, அரசின் சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கடன் உத்திரவாதங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில்,
2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அரசு உத்திரவாதங்களின் அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 29.85 சதவிகிதமாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2.62 சதவிகிதமாகவும் உள்ளது.
ஆண்டுதோறும் மீளப்பெறும் சாத்தியக்கூறுகள் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையில் உள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் கணக்கு வரவுகளில் 75 சதவிகிதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும்.
2020-21ஆம் நிதியாண்டுக்கான வரசு, செலவு திட்டத்தில் 21 லட்சத்து 67 ஆயிரத்து 122 கோடியாக மதிப்பிட்ட வருவாய் பற்றாக்குறை, 2021-22ஆம் நிதியாண்டில் 16 லட்சத்து 89 ஆயிரத்து 319 கோடி ரூபாயாக குறையும். இது 2022-23இல் 10 லட்சத்து 97 ஆயிரத்து 47 கோடியாக மேலும் குறையும்.
இது மூலதன செலவுக்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது. வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதி பற்றாக்குறை விகிதம் 2021-22ஆம் ஆண்டில் 2.58 சதவிகிதம் மற்றும் 2022-23ஆம் ஆண்டில் 2.52 சதவிகிதமாக இருக்கும். இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு