தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

By

Published : May 28, 2021, 9:18 PM IST

Updated : May 28, 2021, 9:24 PM IST

தமிழ்நாட்டில் குறையும் கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.28) புதிதாக 31 ஆயிரத்து 079 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சிலநாட்களாக 36 ஆயிரத்தை நெருங்கியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்றுகுறைய தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது பாய்ந்தது போக்சோ!

பயிற்சி வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'+2 தேர்வு நிச்சயம்! ஆன்லைனில் நடத்தப்படாது' - அன்பில் மகேஷ்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும் ஆன்லைனில் நடத்தப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலமானார் காளியண்ணன் ! - 'ஜமீன்தாரி முறைக்கு எதிராக வாக்களித்த ஜமீன்'

மூத்த காங்கிரஸ் உறுப்பினர் டிஎம் காளியண்ணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த இவரே ஜமீன்தாரி முறைக்கு எதிராக வாக்களித்து ஜமீன் ஒழிப்புக்கு வித்திட்டார்.

'மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' - உயர் நீதிமன்ற பதிவுத்துறை

சென்னை: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கறுப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளான மூக்கில் ரத்தம் வழிதல், முகம் வீக்கம் அடைத்தல், கண் தெரியாமல் போவது , பல் லேசாக ஆடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

'என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்' - நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை

ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போ கரண் ஜோஹர்... இப்போ ஷாருக் கான்...: படங்களிலிருந்து விலகிய கார்த்திக் ஆர்யன்

மும்பை: நடிகர் ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் தயாரிக்கும் 'குட்பை ஃப்ரெட்டீ' படத்திலிருந்து நடிகர் கார்த்திக் ஆர்யன் விலகியுள்ளார்.

'ராதே' சல்மான் கானின் முந்தைய படங்களின் சாயல் - சல்மான் கானின் தந்தை விமர்சனம்

மும்பை: நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ராதே' திரைப்படம் சிறப்பான திரைப்படம் இல்லை என சல்மான் கானின் தந்தையும் 'ராதே' படத்தின் கதாசிரியருமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 28, 2021, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details