தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எல்லையை மூடியதால் சிக்கித் தவிக்கும் 200 தமிழர்கள்; ஒடிசா முதலமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்!

சென்னை: ஒடிசா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் 200 தமிழர்களை மீட்க உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

naveen
naveen

By

Published : Apr 24, 2020, 7:46 PM IST

இது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ”நாடு முழுவதும் ஊரடங்கு பிற்பிக்கப்பட்டுள்ளதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை அவர்கள் சொந்த ஊர்களில் விடுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து நூறு வண்டிகளில் 200 தமிழர்கள் சென்றனர். ஆனால், தற்போது ஒடிசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் தாயகம் வர இயலாத சூழல் உள்ளது.

ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் அங்கு அவர்களுக்கு உணவு, பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் சிரமத்தில் உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள அவர்களை மீட்க ஒடிசா அரசு உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை தாங்கள் செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ’டெல்லி தனிமைப்படுத்தல் முகாமில் தவிக்கும் தமிழர்கள்’

ABOUT THE AUTHOR

...view details