தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? - மு.க.ஸ்டாலின்

சென்னை: 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறிய கருத்துக்கு, எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : Oct 24, 2020, 12:48 PM IST

stalin
stalin

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் மு.க. ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” நீட் ஒரு அநீதி. கல்வியை கார்ப்பரேட் சென்டராக மாற்றக்கூடியது தான் நீட் நுழைவுத்தேர்வு. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா இருக்கும் வரை நீட் நுழைய முடியவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அடிமையாக இருப்பதால் நீட் நுழைந்துள்ளது.

'பன்வாரிலால் புரோகித், இதில் மட்டும் காலதாமதம் செய்வது ஏன்?'

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்க்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் திருப்பி அனுப்பிய செய்தியை அதிமுக அரசு சொல்லவில்லை. நீதிமன்றம் மூலம் தான் தெரிய வந்தது. அதேபோல், தேர்தல் அறிக்கையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தரப்படும் எனக் கூறிவிட்டு, அதை தடுக்கக்கூடிய துணிச்சலோ, நடவடிக்கையோ அதிமுகவிடம் இல்லை.

எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சட்டரீதியாகவே நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும். ஆளுநர் பதவி ஏற்றவுடன் மாநிலம் முழுவதும் விதிகளை மீறி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பன்வாரிலால் புரோகித், இதில் மட்டும் ஏன் காலதாமதம் செய்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க மாட்டார் என்ற தைரியம்தானே? ஆனால், திமுக கேள்வி கேட்கும்.

’நான் அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார்'

இந்த மசோதா நிறைவேறி சட்டமாக வந்தால் 300 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடியும். இல்லையென்றால் 8 பேர் தான் ஆக முடியும். இது எவ்வளவு பெரிய அநீதி. 7 பேர் விடுதலையிலும் இதேபோல் கால தாமதம் செய்யும் ஆளுநரின் தமிழர் விரோத போக்குகளை கண்டித்துதான், இவ்விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என்றேன். ஆனால், இதில் நான் அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்? இது முதல்கட்ட போராட்டம். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் “ என்றார்.

’அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என்றேன்'

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details