திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே.4) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே.4) செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சிக் கடலில் அண்ணா அறிவாலயம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் 159 இடங்களையும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 125 இடங்களையும் வென்று ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாகப் (மே.7) பதவியேற்கவுள்ளார்.
திராவிட அரக்கர்களின் ஆட்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
எளிமையாக பதவிப்பிரமாணம்
கரோனா பரவல் காலம் என்பதால் பதவியேற்பு நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் மிக எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.க. ஸ்டாலின் எனும் நான்
ஓயாமல் உழைத்தவனின் இடத்தில் ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருவார். இதையடுத்து ஸ்டாலினுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுப்பார்.
மு.க. ஸ்டாலின் எனும் நான் அந்த அழைப்பின் பேரில் ஆளுநரை சந்திக்கும் முக ஸ்டாலின், தன் தலைமையில் பதவியேற்க போகும் அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்குவார். முதலமைச்சராக முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
அதன் பிறகு தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு அவருக்கு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் 234 பேரும் பதவியேற்பர்.