சென்னை: ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த சி கேட்டகரி ரவுடியான ஆகாஷ் கடந்த 20ஆம் தேதி ரயில்வே ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் ஓட்டேரி போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் போலீசார் குடும்பத்தாரை அழைத்து எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டிற்கு சென்ற ஆகாஷ் சுயநினைவின்றி இருந்ததால் அவரது குடும்பத்தார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதாலேயே ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர். பின்னர் போலீசார் மற்றும் மருத்துவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176(1) என்ற அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். தற்போது சந்தேகமான முறையில் மரணமடைந்த இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணி... அக்.2ஆம் தேதி வேண்டாம்... நவ.6ஆம் தேதி நடத்துங்கள்... உயர் நீதிமன்றம்...