தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

6 முறை ஐஏஎஸ் தேர்வு - 5 முறை ஐஆர்எஸ் ஆக வெற்றி - சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையரின் நம்பிக்கை வழிகாட்டல்

தன்னம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாமல் 6 முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி 5 முறை ஐஆர்எஸ் ஆக வெற்றி பெற்றதாக சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையர் வந்தனாராஜ் தெரிவித்துள்ளார். கடின உழைப்பு, திட்டமிடல், உயர்ந்த கனவு மூலம் வாழ்க்கையில் வெற்றியடையலாம் கூறியுள்ளார்.

சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையர் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை
சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையர் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை

By

Published : Apr 29, 2022, 12:15 PM IST

Updated : Apr 29, 2022, 5:12 PM IST

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23ஆவது கல்லூரி நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாகூர் கல்வி குழும தலைவர் மாலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை துறைமுக சுங்கத் துறை அலுவலர் வந்தனாராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது, "சமீப காலமாக மாணவர்களிடம் அநாகரிக செயல்பாடுகள் அதிகரித்துவிட்டது. மாணவர்கள் மிக உயர்ந்த லட்சியங்களை கனவு காணவேண்டும். பல்கலைகழகத்தில் தன்னுடைய துறையில் முதல் மாணவியாக வந்தபோதும்கூட கேம்ப்பஸ் இண்டர்வியூ விட்டுவிட்டு ஐஏஏஸ் தேர்வுக்கு தயாரானேன். முதல் முறை தோற்றாலும், இரண்டாவது முறை ஐஆர்எஸ் தேர்வில் வெற்றிபெற்றேன்.

சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையரின் நம்பிக்கை வழிகாட்டல்

ஐஆர்எஸ் பணி 24ஆவது வயதில் கிடைத்தது. அத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து ஆறு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி, ஐந்து முறையும் ஐஆர்எஸ் பணி கிடைத்தது. மேலும், ஐஆர்எஸ் பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறேன். எனவே, மாணவர்கள் தங்களின் கடின உழைப்பு, திட்டமிடல், உயர்ந்த கனவு மூலம் வெற்றியடையலாம்" என அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: 'ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீ விபத்திற்கு காரணம் என்ன? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்'

Last Updated : Apr 29, 2022, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details