தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளிகளுக்கு ரூ.419 கோடி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

By

Published : Oct 19, 2021, 7:38 AM IST

Updated : Oct 19, 2021, 8:50 AM IST

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்கு 419 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

சென்னை:தனியார் பள்ளிகளிலுள்ள இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களில் ஆண்டுதோறும் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழங்கிவருகிறது.

2013-14ஆம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வி ஆண்டு வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்ந்த தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 419 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி பள்ளிக் கல்வித் துறையின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு, ஆய்வுசெய்யப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

Last Updated : Oct 19, 2021, 8:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details