இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானிய உதவியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலர்கள் என சாகுபடி செய்த பலவகை பயிர்கள் விளைந்தும், அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த 22 ஆம் தேதி டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகள் வாங்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற உரங்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிடைத்து வரும் மானியத்தில் சுமார் 700 கோடி ரூபாயை பறித்துக் கொண்டுள்ளது.