தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவிட் பாதிப்பு; பழ நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

கோவிட்- 19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூத்த அரசியல் தலைவர் பழ நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Covid-19 Pazha Nedumaran’s health condition is stable Pazha Nedumaran பழ நெடுமாறன் கரோனா பழ நெடுமாறன் உடல்நிலை
Covid-19 Pazha Nedumaran’s health condition is stable Pazha Nedumaran பழ நெடுமாறன் கரோனா பழ நெடுமாறன் உடல்நிலை

By

Published : Feb 13, 2021, 9:50 AM IST

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழ நெடுமாறன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (பிப்.13) அனுமதிக்கப்பட்டார். 87 வயதாகும் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது.

இந்நிலையில் அவருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் நேற்று உறுதிப்படுத்தினர். கரோனா உறுதியை தொடர்ந்து பழ நெடுமாறன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் - பழ நெடுமாறன்

ABOUT THE AUTHOR

...view details