தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி.!

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : May 1, 2020, 6:29 PM IST

Published : May 1, 2020, 6:29 PM IST

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த இருதயவியல் துறை மருத்துவர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருதயவியல் துறை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்களிடம் சிகிச்சையளிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருதயவியல் துறையில் பணிபுரியும் சைதாப்பேட்டையை சேர்ந்த மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, இந்த மருத்துவர் 15 நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்தார். அவருக்கு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தபோது நோய் தொற்று ஏற்படவில்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வு செய்து வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மருத்துவர்கள் வெளியே வந்தால் நடவடிக்கை -மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details