தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3-ஆவது அலை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 22, 2021, 11:54 AM IST

Updated : Jun 22, 2021, 7:05 PM IST

11:47 June 22

கரோனா 3-ஆவது அலையை எதிரக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநிலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மூன்றாவது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை என்ற போதும், எதிர்காலத்தில் பரவல் அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்ள, இரண்டாவது அலையை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி மருந்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,  மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். 

இதையும் படிங்க :நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு: நாளை கடைசி நாள்!

Last Updated : Jun 22, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details