தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

8 இடங்களில் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை திறப்பு

சென்னையில் 8 இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறையினை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

By

Published : Apr 24, 2022, 1:35 PM IST

தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை
தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை

பாலூட்டும் தாய்மார்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, அவர்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட இடம் இல்லாமல் அவதிப்படுவதை போக்கும் வகையில் சென்னை காவல்துறை மற்றும் ஜஸ்டீஸ் மிஷன் இணைந்து தாய்மார்கள் பாலூட்டும் அறையினை நிறுவ திட்டமிட்டனர்.

அதன்படி முதற்கட்டமாக காவல் ஆணையர் அலுவலகம், ஆயிரம் விளக்கு காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, வடபழனி முருகன் கோவில், பெசன்ட் நகர் மாதா உள்பட 8 இடங்களில் நிறுவ உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையினை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.24) காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவன நிர்வாகி ஸ்னேகா ஆகியோர் பாலூட்டும் அறையினை தொடக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க கைக்குழந்தையுடன் பாலூட்டும் தாய்மார்கள் பெருமளவில் வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையினை தொடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். வரவேற்பை பொறுத்து மேலும் சில இடங்களில் நிறுவ உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:75 வயதில் பி.ஹெச்டி பட்டம் பெற்ற சாதனைப் பெண்மணி.. முயற்சிக்கு முதுமை தடையில்லை!

ABOUT THE AUTHOR

...view details