சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ''வெங்காயத்தின் வரத்து எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக உள்ளது. பெல்லாரி வெங்காயத்தை மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ய நான்கு நாள்கள் ஆகின்றன. இதனால் வெங்காயமும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியத் தொகுப்பிலிருந்து 500 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
'வெங்காயத்தை 4 நாள்களுக்கும் மேல் பதுக்க முடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு
சென்னை: ஜனவரிக்குள் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவரப்படுமென கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள ஆறாயிரம் கடைகளுக்கு, இந்த வெங்காயம் விற்கப்படும். வெங்காயத்தை நான்கு நாள்களுக்கும் மேல் பதுக்கிவைக்க முடியாது.
மற்ற கடைகளில் வெங்காயத்தின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு 40 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்கிறது. வெங்காயம் வந்தவுடன் அமுதம் அங்காடிகளிலும் கூட்டுறவு பண்டக சாலைகளிலும் விற்பனை செய்யப்படும். வெங்காய விலையேற்றத்தின் தாக்கம் ஜனவரி மாதத்திற்குள் முடிவுக்கு வரும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம்!