சென்னை: பருவமழையின் போது சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பை சந்தித்தது. அதேபோல் நடப்பு ஆண்டிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியது.
இதனை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
கூடுதல் உறுப்பினர்கள்
சென்னையில் மழைநீர் தேங்குவது குறித்து நிரந்தர திட்ட அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த குழுவில் கூடுதலாக ஆறு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு முதன்மை செயலாளர் ஹித்தேஷ் குமார், ஐஐடி மும்பை பேராசிரியர் கபில் குப்தா, இயக்குநர் நம்பி அப்பாதுரை, பேராசியர் ஜனகராஜன், டாக்டர் பிரதீப் மோசஸஸ், பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், குடிநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் முதன்மை பொறியாளர் ஜெய்சங்கர், நீர்வளத்துறை துறை முதன்மை பொறியாளர் ராஜா, ஓய்வு பெற்ற பொறியாளர் காந்தி மதிநந்தன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோ அண்ணா உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.
இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 3) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயதினை உயர்த்தி அரசாணை வெளியீடு