தமிழ்நாடு

tamil nadu

இயக்குநர் சேதுமாதவன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

By

Published : Dec 24, 2021, 3:30 PM IST

திரைப்பட இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

cm mk stalin
cm mk stalin

சென்னை:தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 75 படங்களுக்கும் மேல் இயக்கி பல்வேறு தேசிய விருதுகளை வென்றவர் இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன். இவர் தமிழ் மொழியில் எம்ஜிஆர் நடித்த 'நாளை நமதே', கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்', சிவக்குமார் நடித்த 'மறுபக்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

90 வயதை எட்டிய கே.எஸ். சேதுமாதவன் இன்று (டிசம்பர் 24) காலை சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப் படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ். சேதுமாதவன் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி - கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details