சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது சென்னை மாவட்டத்தில் தேசியக் குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப்பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கற்க இயலாத சூழல் நிலவுகிறது.
கல்வித் தொலைக்காட்சி மூலம் சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கு பாடம்!
தேசியக் குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சியில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேசியக் குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையினரால் நடத்தப்படும், கல்வித் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை (காலை 11 மணி 11.30 மணிவரை) பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
எனவே, தேசியக் குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.