சென்னை: சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதில் உடன் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டிற்கு இன்று மிக முக்கியமான நாள். சைதாப்பேட்டை பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வந்து 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கிவைத்துள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.