தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில் மோதி தொழிலாளர்கள் பலி - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்த நிகழ்விற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

palanisami
palanisami

By

Published : May 8, 2020, 2:07 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, இன்று அதிகாலை அவ்வழியே சென்ற சரக்கு ரயில் மோதியதில், சுமார் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோர விபத்து: தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ஏறிய சரக்கு ரயில்

ABOUT THE AUTHOR

...view details