தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநிலம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம்..!

குழந்தைகள் தினம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தின கொண்டாட்டம்

By

Published : Nov 15, 2019, 1:26 AM IST

சென்னை:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆவடியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஜார்கன்-2019 (JAGARAN) என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் என சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஆபிநை மற்றும் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கோவை:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கிவைத்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி:

திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள எலைட் சிறப்பு பள்ளியில் கில்லி, பம்பரம், தாயம், சதுரங்கம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் பங்குபெற்ற மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார்.


மதுரை:
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சைல்டு லைன் அமைப்பின் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வினய் பங்கேற்றார். அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் கையில் சு ராக்க்ஷா பந்தன் எனும் சைல்டு லைன் அமைப்பின் காப்பினை கையில் கட்டினர். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை சைல்டு லைன் தோழனாகுவோம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டார். அதில் பொன்னர் சங்கர் தெருக்கூத்தை தத்துரூபமாக நடித்து காட்டி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற குழந்தைகள் தின கொண்டாட்டங்கள்

தஞ்சாவூர்:

கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரு போன்று வேடமணிந்து அணிவகுத்து நின்று நேருவின் பெருமைகளை மழலை மொழியில் எடுத்துரைத்தனர். பள்ளி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பள்ளி மாணவர்களுக்கு தென்னமர மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் கைப்பேசியை ஆக்கபூர்வமான பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறை வழங்கினார்.

கரூர்:
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள கொக்கு மற்றும் பரணி பார்க் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், சிறு விளையாட்டு போன்றவற்றை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆடலுடன் பாடல் மகிழ்வித்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பபட்டது. அதில் கட்டுரை, கவிதை போட்டிகளில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுடன் பெற்றோரும் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:பாரம்பரிய விளையாட்டில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details